ஆலந்தூரில் கருணாநிதிக்கு சிலை - மண்டல குழு கூட்டத்தில் தீர்மானம்


ஆலந்தூரில் கருணாநிதிக்கு சிலை - மண்டல குழு கூட்டத்தில் தீர்மானம்
x

ஆலந்தூர் மண்டல குழு கூட்டத்தில் நேரு நெடுஞ்சாலையில் கருணாநிதிக்கு சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை ஆலந்தூர் மண்டல குழு கூட்டம் மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன் தலைமையில் நடைபெற்றது .இதில் ஒரு காங்கிரஸ், ஒரு அதிமுக, 8 திமுக கவுன்சிலர்கள் உட்பட 10 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் நாஞ்சில் பிரசாத் பேசும்போது, 165- வது வார்டில் புதிதாக சேர்க்கப்பட்ட ஏழு தெருக்கள் இன்னும் என்னுடைய வார்டில் சேர்க்கப்படவில்லை. இதை குறித்து நடத்த முடிந்த 6 மண்டல கூட்டத்திலும் பேசிவிட்டேன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

157 வது குடிநீர் வாரியம் சார்பாக செய்த வேலைகளால் ஆங்காங்கே கல், மண் போன்ற கழிவுகள் அகற்றப்படாமல் சாலையிலே இருப்பதால் ஆய்வு சொல்லும் பொழுது இரண்டு தரம் வழுக்கி விழுந்து விட்டேன் என்று அதிமுக கவுன்சிலர் உஷா கூறினார்.

இது குறித்து கேள்வி நேரத்தில் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தான் காரணம் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

இதனால் மண்டல குழு கூட்டத்தில் ஒருவர் மேல் ஒருவர் குறைகளை சொல்லிக் கொண்டனர். இந்த மண்டலத்தில் கூட்டத்தில் நேரு நெடுஞ்சாலையில் திமுக முன்னாள் தலைவர் கலைஞருக்கு சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோன்று, மொத்தம் 20 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


Next Story