மின்னல் தாக்கி ராஜகோபுர சிலை சேதம்


மின்னல் தாக்கி ராஜகோபுர சிலை சேதம்
x

மின்னல் தாக்கி ராஜகோபுர சிலை சேதம் அடைந்தது.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வீதிகள், சாலைகள், வயல்வெளி பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்தது. பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சிஅளித்தது. பலத்த மழையால் குடிநீர் கிணறுகளில் நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. திருப்புவனம் புதூர் பகுதியில் மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ராஜகோபுரத்தில் மேல் பகுதியில் உள்ள சிலை இடி-மின்னல் தாக்கியதில் சேதமடைந்து உள்ளது. சிலையின் முன்பாகம் சிறிது உடைந்து கீழே விழுந்துள்ளது. உடைந்த பாகங்கள் சிறு சிறு துண்டுகளாக சிதறி கிடந்தன. அவை சேகரிக்கப்பட்டு உள்ளன. மேலும் கோபுர பகுதிகளில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன.


Related Tags :
Next Story