மாநில அளவிலான சப்-ஜூனியர் எறிப்பந்து போட்டி
திருவண்ணாமலையில் மாநில அளவிலான சப்-ஜூனியர் எறிப்பந்து போட்டி நடந்தது.
திருவண்ணாமலையில் மாநில அளவிலான சப்-ஜூனியர் எறிப்பந்து போட்டி நடந்தது.
எறிப்பந்து போட்டி
திருவண்ணாமலை மாவட்ட எறிப்பந்து சங்கம் மற்றும் திருவண்ணாமலை ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் மாநில அளவிலான சப்- ஜூனியர் எறிப்பந்து சாம்பியன் ஷிப் போட்டி தொடக்க விழா திருவண்ணாமலை எஸ்ஆர்.ஜி.டி.எஸ். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாவட்டத்திற்கு ஒரு அணி அடிப்படையில் 32 ஆண்கள் அணியும், 30 பெண்கள் அணியும் கலந்து கொண்டன.
ஒரு அணிக்கு 4 போட்டிகள் நடத்தப்பட்டு அதில் இருந்து ஆண் மற்றும் பெண்கள் அணியில் இருந்து தலா 8 அணிகள் தேர்வு செய்யப்படும்.
பரிசுகள்
பின்னர் அவர்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டு முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட உள்ளது.
மேலும் இந்த போட்டியின் மூலம் 20 சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்து வருகிற ஆகஸ்டு மாதம் புதுச்சேரியில் நடைபெற உள்ள அகில இந்திய அளவிலான எறிப்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாட அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
முன்னதாக போட்டியின் தொடக்க நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு எறிப்பந்து சங்க துணைத்தலைவர் அரவிந்த்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு எறிப்பந்து சங்க தலைவர் பாலவிநாயகம் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்ட தலைவர் தர்ஷன் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி, திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன், அரிமா சங்க மாவட்ட ஆளுனர் மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.
முடிவில் மாவட்ட எறிப்பந்து செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.