மாநில அளவிலான கராத்தே போட்டி
மயிலாடுதுறையில் மாநில அளவிலான கராத்தே போட்டி 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் கட்டா, குமித்தே பிரிவுகளில் ஆண், பெண் இருபிரிவினருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப்போட்டியில் 5 வயது முதல் 25 வயதுக்குள்பட்ட வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story