மாநில கபடி போட்டி
சங்கரன்கோவிலில் மாநில கபடி போட்டி நடைபெற்றது.
வாசுதேவநல்லூர்:
சங்கரன்கோவில் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாவீரன் சுந்தரலிங்கனார் மற்றும் வவுனியா விளையாட்டு குழு சார்பில் மாநில அளவிலான 11-ம் ஆண்டு கபடி போட்டி நடந்தது. ஊர் சமுதாய நாட்டாமைகள் மற்றும் மாடசாமி, சாமிதுரை, முத்து, காளிமுத்து, விக்னேஷ், சித்திரவேல், சீனி ஆகியோர் தலைமை தாங்கினர். அ.தி.மு.க. நகர அவைத்தலைவர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சி வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத்தலைவர் அ.ஆனந்தன் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளையும், கோப்பைகளையும் அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர், சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டர் சண்முக வடிவு, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம், சங்கரன்கோவில் எம்.ஏ.சூசை, ஸ்ரீகுமார், பொன்னம்பலம் நெடுஞ்செழியன், கண்ணன் என்ற ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். கபடி போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 88 அணிகள் கலந்து கொண்டன.