மாநில கபடி போட்டி
வாசுதேவநல்லூர் அருகே தேவிபட்டினம் கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது.
தென்காசி
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் யூனியன் தேவிபட்டினம் கிராமத்தில் ஊர்தோப்பு மைதானத்தில் தேவிபட்டணம் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவில் ஆண்களுக்கான ஒரு நாள் மின்னொளி கபடி போட்டி நடந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 130 அணிகள் கலந்து கொண்டன. சிறப்பாக விளையாடிய தேவிபட்டணம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதலிடத்ைத பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.
விழாவுக்கு பாரதிய ஜனதா வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் அ.ஆனந்தன் தலைமை தாங்கி, பரிசு மற்றும் சுழற்கோப்பையை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாரதி, ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் சங்கரநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story