பெண் குழந்தைகளுக்கான மாநில அரசு விருது


பெண் குழந்தைகளுக்கான மாநில அரசு விருது
x

நாமக்கல்லில் பெண் குழந்தைகளுக்கான மாநில அரசு விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாமக்கல்

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் 2022-23-ம் ஆண்டிற்கான மாநில அரசின் விருது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி வழங்கப்பட உள்ளது. அதற்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 13 வயதிற்கு மேல் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளாக இருப்பதோடு, பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், தனித்துவமான சாதனை செய்தவர் இந்த விருதுக்கு தகுதி உடையவர் ஆவார்.

மேலும் பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகளுக்கு தீர்வு காண ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். எனவே சாதனை புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயர் மற்றும் விவரங்கள் அடங்கிய விண்ணப்பம் வருகிற நவம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் நாமக்கல் மாவட்ட சமூகநல அலுவலருக்கு கிடைக்கும் வகையில் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story