காரியாபட்டி பேரூராட்சியில் மாநில ஆணையாளர் ஆய்வு


காரியாபட்டி பேரூராட்சியில் மாநில ஆணையாளர் ஆய்வு
x

காரியாபட்டியில் பேரூராட்சிகளின் ஆணையாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டியில் பேரூராட்சிகளின் ஆணையாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அடிப்படை வசதி

காரியாபட்டியில் பேரூராட்சிகளில் மாநில ஆணையாளர் செல்வராஜ் நேரில் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

காரியாபட்டியில் உள்ள வளம் மீட்பு பூங்காவுக்கு சென்ற அவர் அங்குள்ள கலவை உரம், மண்புழு உரம் எப்படி? தயார் செய்யப்படுகிறது என்பதை பார்வையிட்டார்.

நாளொன்றுக்கு எவ்வளவு உரங்கள் தயார் செய்யப்படுகிறது. உரங்கள் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்று கேட்டறிந்தார். காரியாபட்டி பேரூராட்சியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் மரக்கன்றுகளை ஆணையாளர் செல்வராஜ் நட்டார். இதை தொடர்ந்து காரியாபட்டி பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகம், சந்தப்பேட்டை வணிக வளாகத்தில் உள்ள சுகாதார வளாகம் ஆகிய இடங்களுக்கு சென்று அங்கு சுகாதார வளாகங்கள் சுத்தமாக உள்ளதா என்றும், பயனாளர்களுக்கு அடிப்படை வசதி செய்யப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார்.

விழிப்புணர்வு பேரணி

பின்னர் காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் எனது குப்பை எனது பொறுப்பு நகரங்களுக்கான தூய்மைக்கான விழிப்புணர்வு பேரணியை பேரூராட்சி ஆணையாளர் செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

இதில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன், பேரூராட்சி சேர்மன் ஆர்.கே.செந்தில், பேரூராட்சி செயல் அலுவலர் ஸ்ரீ ரவிக்குமார், துைணத்தலைவர் ரூபி சந்தோஷம் உட்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story