பட்டாசு உற்பத்தி தொடக்கம்


பட்டாசு உற்பத்தி தொடக்கம்
x

வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது.

பட்டாசு ஆலைகள்

வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, செவல்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. பட்டாசிற்கு பேரியம் நைட்ரேட் பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்ததால் 60 சதவீத பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன.

மேலும் பசுமை பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். சரவெடிகள், கம்பி மத்தாப்புகள் உற்பத்தி செய்ய அனுமதியில்லை, தீபாவளிக்கு 2 மணி நேரமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என நீதிமன்றத்தின் அறிவிப்பு என பல்வேறு காரணங்களால் பட்டாசு உற்பத்தி குறைந்தது.

உற்பத்தி தொடங்கியது

பட்டாசு உற்பத்தி குறைந்ததால் தீபாவளி சீசனில் பட்டாசு ஆலைகளில் பட்டாசுகள் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே முழுமையாக விற்று தீர்ந்தது. தீபாவளிக்கு குறைந்தபட்சம் 1 மாதம் முதல் 1½ மாதம் வரை விடுமுறை விடப்படும். தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகைகளுக்கு வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் ஆர்டர்கள் வர தொடங்கிவிட்டன. இதற்கிடையே பட்டாசு ஆலையில் பட்டாசுகள் இருப்பு இல்லை.

இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள் வளர்பிறையை முன்னிட்டு பட்டாசு உற்பத்தியை நேற்று முதல் தொடங்கியுள்ளனர். இதனால் வேலை கிடைத்த மகிழ்ச்சியில் பட்டாசு தொழிலாளர்கள் உள்ளனர். பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story