கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை: மருத்துவ தலைநகரில் மற்றுமொரு மகுடம்


கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை: மருத்துவ தலைநகரில் மற்றுமொரு மகுடம்
x
தினத்தந்தி 15 Jun 2023 10:00 PM IST (Updated: 15 Jun 2023 10:00 PM IST)
t-max-icont-min-icon

சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் கல்வெட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சென்னை

தொடர்ந்து கருணாநிதியுடைய மார்பளவு வெண்கல சிலையை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள வசதிகளை பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், ஏ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.

மருத்துவமனையில் உள்ள வசதிகள்

* கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவையொட்டி கிண்டி தொழிற்பே்டை வளாகம் முழுவதும் விழா கோலம் பூண்டிருந்தது.

* 15 மாதத்தில் ரூ.240.54 கோடி மதிப்பில் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள 6 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51 ஆயிரத்து 429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் தளங்களுடன் கூடிய கட்டிடத்தில் 1,000 படுக்கை வசதிகள் உள்ளன.

* ஏழைகளுக்கு உலகத் தரத்திலான அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவனையில், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூ.146.52 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டு உள்ளன.

மிகப்பெரிய சாதனை

* தென் சென்னையை மையமாக வைத்து செயல்படவிருக்கும் கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்த நாளங்கள், குடல் - இரைப்பை, புற்றுநோய், கேத்லேப், மயக்கவியல் ஆகிய பிரிவுகளுக்கான சிறப்பு அறுவை சிகிச்சைக்கான துறைகளும் பிரம்மாண்டமான முறையில் 10 நவீன அறுவை சிகிச்சை அரங்குகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

* மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடர்ந்து தாமதப்பட்டு வரும் நிலையில், 15 மாதங்களல் தமிழக அரசால் ஒரு பன்னோக்கு மருத்துவமனையை கட்ட முடிந்திருக்கிறது என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

* மருத்துவமனையின் 'ஏ'பிளாக்கில் ரூ.78 கோடி மதிப்பில் 16 ஆயிரத்து 736 அடி பரப்பளவில் நிர்வாக கட்டிடம் மற்றும் புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. 'பி' பிளாக்கில் ரூ.78 கோடி மதிப்பில் 18 ஆயிரத்து725 அடி பரப்பளவில் அறுவை சிகிச்சை பிரிவுக்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து, 'சி' பிளாக்கில் 15 ஆயிரத்து 968 அடி பரப்பளவில் ரூ.74 கோடியில் கதிரியக்க நோய்க்கான பிரிவு வார்டுகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது.

* மருத்துவமனையை திறந்து வைக்க வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள் ஏ.வ.வேலு, மா.சுப்ரமணியன் புத்தகம் கொடுத்து வரவேற்றனர்.

மற்றுமொரு மகுடம்

* நாட்டிலேயே மருத்துவத்திற்கான தலைநகராக திகழும் தமிழகத்தில் மற்றுமொரு மகுடம் தான் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை என்று மருத்துவர்கள் புகழாரம் தெரிவிக்கின்றனர்.

* மருத்தவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் உட்பட 757 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

* எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ப.சிதம்பரம், தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், திருமாவளவன், தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், பாடலாசிரியர் வைரமுத்து, தலைமைச் செயலாளர் வே. இறையன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு முன்னிட்டு சமீபத்தில் வெளியிடப்பட்ட 1924- 2023 என்ற நினைவு சின்னம் வெளியிடப்பட்டது. இந்த சின்னம் பொறிக்கப்பட்ட முதல் கட்டிடம் என்ற பெருமையை இந்த மருத்துவமனை பெறுகிறது.


Next Story