ராமேஸ்வரத்தில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட புனித சந்தியாகப்பர் தேவாலய கொடியேற்ற விழா


ராமேஸ்வரத்தில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட புனித  சந்தியாகப்பர் தேவாலய கொடியேற்ற விழா
x

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் புனித சந்தியாகப்பர் தேவாலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் வேர்க்காடு கிராமத்தில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் தேவாலயத்தின் 480 ஆம் ஆண்டு திருவிழாவையொட்டி நேற்று ராமநாதபுரம் மறைமாவட்ட பொருளாளர் சந்தியாகு, திருவிழா கொடி ஏற்றினார்.

இதனை தொடர்ந்து பாதிரியார் செபாஸ்டின் திருப்பலி நடத்தினார். இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்லாது, இஸ்லாம் மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இங்கு வரும் ஜுலை 24 ஆம் தேதி தேர்பவனி, திருப்பலி நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story