புனித அந்தோணியார் ஆலய திருவிழா


புனித அந்தோணியார் ஆலய திருவிழா
x

சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா திருத்தலம் சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் ஆலய 2-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, ஆலயத்தில் மாலை 6 மணிக்கு தாய்கோவில் பரிசுத்த அதிசயபனிமாதா திருத்தலத்தில் இருந்து கொடிப்பவனியாக வந்து புனித அந்தோணியார் சப்பரப்பவனி நடைபெற்றது.

பவனி ஆலயத்தை அடைந்ததும் பங்குத்தந்தை ஜெரால்டு ரவி, அமலிவனம் அருட்தந்தைகள் ஜெபநாதன், ஜோசப் ஸ்டார்லின், ரூபன், ராயப்பன், உதவிப்பங்குத்தந்தை சிபு ஜோசப் ஆகியோர் ஜெபம் செய்து புனித கொடியை அர்ச்சித்தனர். தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் கொடியேற்றினார்.

தொடர்ந்து தூத்துக்குடி நற்செய்தி நடுவம் இயக்குனர் ஸ்டார்வின் தலைமையில் திருப்பலி மறையுரை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு அன்பின் விருந்து நடந்தது. இன்று (திங்கட்கிழமை) 2-ம் திருநாள் இரவு 7 மணிக்கு சோமநாத பேரி பங்குத்தந்தை மைக்கிள் ஜெகதீசு தலைமையில் திருப்பலி, மறையுறை மற்றும் அன்பின் விருந்தும் இரவு 8.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு தெற்கு கள்ளிகுளம் ஓ.எல்.எஸ். பள்ளி முதல்வர் - தாளாளர் எஸ்.கே.மணி தலைமையில் ஆராதனையும், திருவிழா திருப்பலியும் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு புனிதரின் சப்பரப்பவனியும், தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு திருக்கொடி இறக்கமும், இரவு 9 மணிக்கு அன்பின் விருந்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

திருவிழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் பங்கு தந்தையர்கள், நிர்வாக உறுப்பினர்கள், இறைமக்கள் செய்துள்ளனர்.


Next Story