எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்குதற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்


எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்குதற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்
x

எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் செய்யப்பட்டது.

ஈரோடு

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு கடந்த 19-ந் தேதி வெளியானது. இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் மேற்படிப்பு சேர்க்கைக்கு தேவையான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இணையதளம் மூலமாக தற்காலிக மதிப்பெண்கள் சான்றிதழ்கள் வினியோகம் நேற்று முன்தினம் தொடங்கியது. ஈரோட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிக்கூடங்களில் இணையதளம் மூலமாக தற்காலிக மதிப்பெண்கள் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்த மாணவிகளுக்கு நேற்று தலைமை ஆசிரியை சுகந்தி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கினார். பிளஸ்-1 வகுப்பு, பட்டய படிப்பு உள்ளிட்ட படிப்புகளில் சேர இருக்கும் மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிக்கூடங்களுக்கு சென்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று வருகிறார்கள்.


Related Tags :
Next Story