காட்டுமன்னார்கோவிலில் ஸ்ரீமந் நாதமுனிகள் அவதார தின விழா: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது


காட்டுமன்னார்கோவிலில் ஸ்ரீமந் நாதமுனிகள் அவதார தின விழா: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 11:03 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவிலில் ஸ்ரீமந் நாதமுனிகள் அவதார தின விழா அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற வீரநாராயண பெருமாள் கோவிலில் ஸ்ரீமந் நாதமுனிகள் 1,200-வது ஆண்டு அவதார தின விழா நடந்தது. இதற்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்து பேசுகையில், முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் ஸ்ரீமந் நாதமுனிகள் அவதார தினத்தை அரசு விழாவாக நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி இந்த நிகழ்ச்சி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தி.மு.க. அரசு வீரநாராயண பெருமாள் கோவிலில் திருப்பணி வேலைக்காக ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், தற்போது 50 சதவீத பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல பிரசித்தி பெற்ற அனந்தீஸ்வரர் கோவிலுக்கும் திருப்பணி மேற்கொள்ள ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகளும் நடந்து வருகிறது என்றார். முன்னதாக கடலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் அனைவரையும் வரவேற்றார். அட்மா குழு தலைவர்கள் முத்துசாமி, ராமலிங்கம், பேரூராட்சி மன்ற தலைவர் கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இடையே நாலாயிர திவ்ய பிரபந்தம் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கபட்டது. இதில் தக்கார் சரண்யா, ஆய்வாளர் ஜெயசித்ரா, செயல் அலுவலர் செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டனர் .முடிவில் கடலூர் மாவட்ட உதவி ஆணையர் சந்திரன் நன்றி கூறினார்.


Next Story