காஞ்சீபுரம் கோதண்ட ராமர் பஜனை கோவிலில் ஸ்ரீராம நவமி விழா
காஞ்சீபுரம் கோதண்ட ராமர் பஜனை கோவிலில் ஸ்ரீராம நவமி விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மேற்கு ராஜ வீதியில் கோதண்ட ராமர் பஜனை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 20-ம் தேதி ராமநவமி திருவிழா தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு தலைப்புகளுடன் ராமாயணம் உபன்யாசம் நடைபெற்று வருகிறது.
நேற்று காலை ராம நவமியையொட்டி, ஸ்ரீராமர், சீதாலட்சுமி, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பிறகு சிறப்பு அலங்காரத்தில் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காலை ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது.
மாலை சீதா சமேத கோதண்டராமர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. இரவு அனுமந்த வாகனத்தில் சாமி எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ராமநவமியையொட்டி நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story