ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா


ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா
x

ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் பாக்கியராஜ் கலந்து கொண்டார்.

புதுக்கோட்டை

ஆண்டு விழா

காரைக்குடியில் ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 13-ம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சுப்பையா தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் கலந்து கொண்டு பேசினார்.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின் பேராசிரியர் அய்யாவு, அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் குணசேகரன், கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் வடிவாம்பாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரியின் ஆண்டு விழா மலர் வெளியிடப்பட்டது.

தங்க நாணயம் பரிசு

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தங்க நாணயம், சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

மேலும் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று நூறு சதவீத தேர்ச்சி பெற வைத்த கல்லூரியின் பேராசிரியர்களுக்கு தங்க நாணயம், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டது. முன்னதாக கல்லூரி முதல்வர் இளங்கோ வரவேற்றார். முடிவில் துணை முதல்வர் மகாலிங்க சுரேஷ் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் விஜய் மற்றும் கீர்த்தனா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story