தமிழக மீனவர்கள் 9 பேரை தாக்கி மீன்பிடி பொருள்களை கொள்ளையடித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் ...!


தமிழக மீனவர்கள் 9 பேரை தாக்கி மீன்பிடி பொருள்களை கொள்ளையடித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் ...!
x
தினத்தந்தி 18 Oct 2023 10:51 AM IST (Updated: 18 Oct 2023 11:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழக மீனவர்கள் 9 பேரை தாக்கி மீன்பிடி பொருள்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மீனவர்கள் சிலர் கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென இலங்கை கடற்கொள்ளையர்கள் சிலர் அங்கு வந்தனர். அவர்கள் மீனவர்களை சுற்றிவளைத்து தாக்க ஆரம்பித்தனர்.

இந்த எதிர்பாராத தாக்குதலில் 9 மீனவர்கள் காயமடைந்தனர். பின்னர் மீனவர்களிடம் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள் ஆகியவற்றை கொள்ளையர்கள் எடுத்துக்கொண்டனர். மேலும் அவர்களிடம் இருந்த தங்க சங்கிலிகளையும் பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் இலங்கை கடற்கொள்ளையர்கள் எங்களை சித்திரவதை செய்ததாக நாகை மீனவர்கள் வேதனையுடன் கூறினார்கள்.

இந்நிலையில் காயமடைந்த 9 மீனவர்களும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கடலோரக் காவல்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story