நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 19 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை


நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 19 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 13 Sept 2023 5:14 PM (Updated: 13 Sept 2023 5:25 PM)
t-max-icont-min-icon

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 19 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராமேஸ்வரம்,

தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதுவரை எந்தவித பயனும் இல்லை. ஆனாலும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசும், மீனவர்கள் கைது நடவடிக்கை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனர்வர்களை நெருந்தீவு அருகே தென்கிழக்கு கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story