ஆண்டாள் கோவிலில் வசந்த உற்சவம் தொடக்கம்


ஆண்டாள் கோவிலில் வசந்த உற்சவம் தொடக்கம்
x

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று தொடங்கிய வசந்த உற்சவம் 14-ந் தேதி வரை நடக்கிறது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று தொடங்கிய வசந்த உற்சவம் 14-ந் தேதி வரை நடக்கிறது.

வசந்த உற்சவம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்குரிய வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த உற்சவம் 14-ந் தேதி வரை நடைபெறுகிறது.

வசந்த உற்சவத்தை முன்னிட்டு தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வந்து நாடகசாலை தெருவில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

சாமி தரிசனம்

கோடைகாலம் என்பதால் ஆண்டாள், ெரங்கமன்னாருக்கு திருமேனியில் சந்தனம் பூசப்பட்டு மலர் ஆடை மற்றும் மலர் கொண்டை அணிவிக்கப்படுகிறது. மலர் ஆடை மற்றும் மலர் கொண்டை அணிந்து வசந்த மண்டபத்தில் காட்சி அளிக்கும் ஆண்டாள், ெரங்கமன்னாரை ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமன்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வசந்த உற்சவத்திற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா, கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.


Next Story