நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு


நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு
x
தினத்தந்தி 14 Jun 2023 5:12 PM IST (Updated: 14 Jun 2023 5:18 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.

வேலூர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்லப்பாடி காப்புக்காடுகள் பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன. இந்த புள்ளி மான்கள் தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடுகிறது.

இந்த நிலையில் தண்ணீர் தேடி கல்லப்பாடி காப்புக்காடுகளில் இருந்து ஊருக்குள் புகுந்த பெண் புள்ளிமானை நாய்கள் விரட்டி வந்துள்ளது. அந்த புள்ளிமான் நாய்களிடம் இருந்து தப்பி குடியாத்தம் சித்தூர் கேட் முனாப் டிப்போ அருகே உள்ள மின்வாரிய துணை மின் நிலையம் அருகே வந்துள்ளது. அப்போது நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறியதில் குடல் வெளிவந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனக்காப்பாளர் பூபதி மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று புள்ளிமானை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பின், கல்லப்பாடி காப்புக்காடுகள் முதலியார் ஏரி பகுதியில் எரித்தனர்.


Next Story