மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திய புள்ளிமான்கள்


மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திய புள்ளிமான்கள்
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே தோட்டங்களுக்கு புகுந்து மக்காச்சோள பயிர்களை புள்ளிமான்கள் சேதப்படுத்தின.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே தோட்டங்களுக்கு புகுந்து மக்காச்சோள பயிர்களை புள்ளிமான்கள் சேதப்படுத்தின.

பயிர்கள் சேதம்

கயத்தாறு தாலுகா குருமலை பஞ்சாயத்து சுந்தரேசுவரபுரம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம், உளுந்து, கம்பு, பருத்தி போன்றவற்றை பயிரிட்டுள்ளனர். குருமலை அடிவார பகுதியில் அமைந்துள்ள இங்குள்ள விவசாய நிலங்களுக்கு அடிக்கடி காட்டுப்பன்றிகள், மிளா, புள்ளிமான்கள் போன்றவை புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.

நேற்று முன்தினம் இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புள்ளிமான்கள் கூட்டமாக தோட்டங்களுக்குள் புகுந்து மக்காச்சோள பயிர்களின் கதிர்களை தின்று சேதப்படுத்தின. காட்டுப்பன்றிகளும் பயிர்களை சேதப்படுத்தி உள்ளன.

நிவாரணம் வழங்க...

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ''கடந்த சில நாட்களாக இங்குள்ள விவசாய தோட்டங்களுக்குள் புள்ளிமான்கள், காட்டுப்பன்றிகள் கூட்டமாக புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன. இதனால் இரவில் தோட்டங்களில் தங்கியிருந்து பயிர்களை பாதுகாத்து வருகிறோம். எனினும் புள்ளிமான்கள், காட்டுப்பன்றிகள் போன்றவை திடீரென்று விளைவிலங்களுக்குள் கூட்டமாக புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.

தற்போது சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்களை புள்ளிமான்கள் சேதப்படுத்தி உள்ளன. எனவே வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்'' என்றனர்.


Related Tags :
Next Story