385 கிராம ஊராட்சிகளில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது
சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்
சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
விளையாட்டு மைதானம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் அத்தனூர்பட்டி ஊரக விளையாட்டு மைதானத்தை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- இளைய தலைமுறையினருக்கு விளையாட்டில் ஆர்வத்தை ஊக்குவிக்கும் போது எதிர்காலத்தில் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய தேவைகள் குறையும். ஆரோக்கியமான கிராம சமுதாயத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 385 கிராம ஊராட்சிகளில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மகுடஞ்சாவடியில் 2, ஏற்காடு, பனமரத்துப்பட்டி, ஓமலூர் ஆகிய இடங்களில் தலா ஒரு ஊரக விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி மாவட்டத்தில் ஊரக விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் 99 சதவீதம் முடிவடைந்துள்ளது.
ஒழுக்கத்தை கற்று தரும்
குறிப்பாக ஊரக விளையாட்டு மைதானம் தரமுடன் நீண்ட நாட்களுக்கு இளைஞர்கள் பயன்படுத்தும் வகையில் ரூ.4 கோடியே 66 லட்சத்தில் பேவர் பிளாக் நடைமேடை, பேவர் பிளாக் நடைபாதை, பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே விளையாட்டு மீதான ஆர்வத்தை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அதிகரிக்க செய்ய வேண்டும்.
மேலும் விளையாட்டு பாட வேளையில் மற்ற பாடங்கள் நடத்தக்கூடாது. விளையாட்டு போட்டிகள் மாணவ, மாணவிகளிடையே சிறந்த ஒழுக்கத்தை கற்றுத்தரும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் அம்பாயிரநாதன், தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.