கடலூரில்ஊர்க்காவல் படை வீரர்களுக்கான விளையாட்டு போட்டிகள்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தொடங்கி வைத்தார்
கடலூரில் ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தொடங்கி வைத்தார்.
விளையாட்டு போட்டிகள்
தமிழ்நாடு ஊர்க்காவல் படை விழுப்புரம் சரகம் 28- வது பணித்திறன் மற்றும் விளையாட்டு போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. போட்டிகளை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ஊர்க்காவல் படையினருக்கு 50 மீ, 100 மீ, 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், 400 மீட்டர் தொடர் ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், கயிறு இழுத்தல், கபடி, வலைப்பந்து ஆகிய போட்டிகளும், மீட்பு பணி, தீயணைப்பு பணி, முதல் உதவி, கூட்டு கவாத்து, உடற்பயிற்சி, துப்பாக்கி சுடுதல் போன்ற பணித்திறன் போட்டிகளும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடந்தது. இந்த போட்டியில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.
பரிசு
தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார். இதில் ஊர்க்காவல் படை வட்டார தளபதி அம்ஜத்கான், துணை வட்டார தளபதிகள் கலாவதி, சுரேஷ் ஆதித்தியா, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருட்செல்வன், ஊர்க்காவல் படை ஆய்வாளர் அருணாசலம் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.