நெமிலி பாலா பீடத்தில் ஆத்மீக முப்பெரும் விழா


நெமிலி பாலா பீடத்தில் ஆத்மீக முப்பெரும் விழா
x

நெமிலி பாலா பீடத்தில் ஆத்மீக முப்பெரும் விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஸ்ரீபாலா பீடத்தில் 14-ம் ஆண்டு ஆத்மீக திருவிழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாலா பீடாதிபதி நெமிலி கவிஞர் எழில்மணி தலைமை தாங்கி அன்னை பாலாவின் ஆத்மீக குடும்பங்கள் செய்துவரும் சேவைகளை பாராட்டி பேசினார். முதல் நிகழ்ச்சியாக ஆத்மீக குடும்பங்களின் தலைவியான நாகலட்சுமி எழில்மணியின் 74-வது ஜெயந்தி விழா நடைபெற்றது. அவர் அனைவருக்கும் அன்னை பாலாவின் மஞ்சள் குங்குமப் பிரசாதங்களை வழங்கி ஆசி கூறினார்.

தொடர்ந்து குருஜி நெமிலி பாபாஜி, அன்னை பாலாவின் வண்ணப்படம் மற்றும் 2023-ம் ஆண்டின் பாலா பீட நிகழ்ச்சி குறிப்புகள் அடங்கிய நாள்காட்டியை வெளியிட, முதல் பிரதியை திரைப்பட பின்னணி பாடகர் மதுவும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மகனான பிரகாஷும் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், நெமிலி பாலா பீடத்தை தரிசித்த அனுபவத்தையும், திரைத்துறை நினைவுகளையும் எழுதிய 'நான் ஓரு ரசிகன்' என்னும் விகடன் பிரசுரம் வெளியிட்ட நூலின் மறு வெளியீட்டு விழா நடைபெற்றது. நூலினை சென்னை சூர்யா மருத்துவமனையின் இருதய நோய் பிரிவின் தலைமை மருத்துவர் ஜெயராஜா பெற்றுக்கொண்டார். பாலா பீட நிர்வாகி மோகன் ஜி வரவேற்றார். செயலாளர் முரளிதரன் தலைமையில் அன்னதானம் நடைபெற்றது.


Next Story