கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி


கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
x

நாமக்கல்லில் பெரியார் பிறந்தநாளையொட்டி வருகிற 19-ந் தேதி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.

நாமக்கல்

இது தொடர்பாக கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பேச்சுப்போட்டி

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி வருகிற 19-ந் தேதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கான இந்த பேச்சுப்போட்டி காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்படும். இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

இந்த போட்டியில் பெரியாரும் பெண் விடுதலையும், சுயமரியாதை இயக்கம், தெற்காசியாவின் சாக்ரடீஸ், தன்மான பேரொளி, தந்தை பெரியாரின் சமூகநீதி சிந்தனைகள் போன்ற தலைப்புகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.

பரிசுகள்

கல்லூரி மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் கல்லூரி கல்வி இணை இயக்குனர் வழியாக இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டிடத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் விரைவில் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story