அரசு தொழில்நுட்ப கல்லூரியில் பேச்சுப்போட்டி


அரசு தொழில்நுட்ப கல்லூரியில் பேச்சுப்போட்டி
x

அரசு தொழில்நுட்ப கல்லூரியில் பேச்சுப்போட்டி நடந்தது.

கரூர்

காணியாளம்பட்டி, அரசினர் பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் தேன்மொழி தலைமை தாங்கினார்.

பின்னர் மாணவர்களுக்கிடையே கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, பேச்சு போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. பின்னர் கரூர் பஸ் நிலையம், ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் வருகைபுரிந்த சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு உலக சுற்றுலா தின விழாவையொட்டி தூய்மை முகாம் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் அரசு கலை கல்லூரி கரூர் செஞ்சுருள் சங்க மாணவர்களை கொண்டு தூய்மை பணி மற்றும் சுற்றுலா பகுதிகளில் தூய்மை கடைபிடிக்க வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் உதவி சுற்றுலா அலுவலர் காமில் அன்சர், கரூர் அரசு கலைக்கல்லுரி பேராசிரியர்கள் ராஜசேகர தங்கமணி (ஓய்வு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story