கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர்
தமிழ் வளர்ச்சித் துறையின் மானிய கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி வருகின்ற 3-ந் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியானது காலை 10 மணி முதல் திருவள்ளூரில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். எனவே, கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்று பயன் அடையளாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story