அய்யப்பன் கோவிலில் மாணவ-மாணவிகளுக்காக ஹயக்ரீவருக்கு சிறப்பு யாகம்


அய்யப்பன் கோவிலில்  மாணவ-மாணவிகளுக்காக ஹயக்ரீவருக்கு சிறப்பு யாகம்
x

அய்யப்பன் கோவிலில் மாணவ-மாணவிகளுக்காக ஹயக்ரீவருக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.

மதுரை

அலங்காநல்லூர்

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி அலங்காநல்லூரில் உள்ள ஸ்ரீதர்மசாஸ்தா அய்யப்பன் கோவில் வளாகத்தில் ஸ்ரீஹயக்ரீவர், சரஸ்வதி தேவிக்கும் சிறப்பு யாகம் பட்டர்கள் வேத மந்திரங்களுடன் பூஜைகள் நடந்தது. இதைதொடர்ந்து லட்சுமி ஹயக்ரீவருக்கு பால், பன்னீர், இளநீர், புஷ்பங்களால் அபிஷேகம் அலங்காரங்கள், தீபாராதனைகள் நடைபெற்றது.

இதில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து யாகத்தில் கலந்து கொண்டனர். மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பேனா உள்ளிட்ட எழுதும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் அய்யப்பன், முருக பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story