கொங்கலம்மன் கோவிலில் சிறப்பு யாகம்
கொங்கலம்மன் கோவிலில் சிறப்பு யாகம்
ஈரோடு
ஈரோடு கொங்கலம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந் தேதி தொடங்கப்பட்டது. தினமும் காலையில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு நாட்களும் சிறப்பு அலங்காரத்தில் கொங்கலம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் கொங்கலம்மனுக்கு சரஸ்வதி தேவி அலங்காரம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் நவராத்திரி நிறைவு விழாவையொட்டி உலக நன்மை வேண்டி சிறப்பு (நவமகா சண்டி) யாகம் கோவிலில் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி துர்கா லட்சுமி சரஸ்வதி சாமிகளின் உற்சவ சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பிரமாண்ட அக்னி குண்டத்தில் யாகம் வளர்க்கப்பட்டது. அதன்பிறகு யாகத்தில் வைக்கப்பட்ட கலசத்தின் புனிதநீரால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story