சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

நொய்யல்,

புன்னம் பகுதியில் உள்ள புன்னை வனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் குந்தாணிபாளையம், திருக்காடுதுறை, நஞ்சை புகழூர், காகிதபுரம் குடியிருப்பு, தோட்டக்குறிச்சி, மண்மங்கலம் மற்றும் நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் உள்ள பல்வேறு சிவன்கோவில்களிலும் நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தோகைமலை ஒன்றியம், ஆர்டிமலை மீது விராசிலை ஈஸ்வரர் கோவில் உள்ள நந்திபகவானுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபம் காட்டப்பட்டது. இதேபோல் தோகைமலை மலை மீது அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ேகாவில், சின்னரெட்டிபட்டி ஆவுடைலிங்கேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன்கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story