ஆடி கிருத்திகையையொட்டிமுருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடி கிருத்திகையையொட்டிமுருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் நகரில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து அலங்காரம் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் கள்ளக்குறிச்சி ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் வள்ளி தெய்வானைக்கு ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக வள்ளி, தெய்வானை, முருகனுக்கு பன்னீர், இளநீர், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, சந்தன காப்பு அணிவிக்கப்பட்டது. இதையடுத்து சந்தன காப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


Next Story