அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்


ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆடி வெள்ளி

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். ஆடிமாத வெள்ளிக்கிழமையையொட்டி நாகை மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

அதன்படி நாகை பால்பண்ணைச்சேரி ஜெயபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களால் சிறப்பு கனி அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

அதேபோல நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில், திருக்குவளை அருகே கார்குடி மகாமாரியம்மன் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வாய்மேடு

இதேபோல் வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தலைஞாயிறு அருகே உள்ள உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் ஆடிவெள்ளியையொட்டி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று, பின்னர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

திட்டச்சேரி

திட்டச்சேரி வெள்ளத்திடல் மகா மாரியம்மன், காளியம்மன் கோவில், திருமருகல் மாரியம்மன் கோவில், அகரக்கொந்தகை பிடாரி அம்மன் கோவில், பண்டாரவடை மாரியம்மன் கோவில், கட்டலாடி பாதாள காளியம்மன் கோவில், உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story