தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு


தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 3 Aug 2023 7:00 PM GMT (Updated: 3 Aug 2023 7:00 PM GMT)

தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலையில் மலை மீது உள்ள முருகன் கோவில் மூலஸ்தானத்தை அடைய சுமார் 1,193 அகன்ற படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு 3-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்தது.

இதையொட்டி விவசாயம் செழிக்கவும், பருவ மழை பெய்து விவசாயம் செழித்து நாடு நலம் பெற வேண்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து மலை மீது இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அடிவாரத்தில் உள்ள விநாயகர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

பின்னர் சிவந்திபுரம் திருவாசகம் முற்றோதல் குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி, மடத்தூர் பள்ளி மாணவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், சிறப்பு இன்னிசை கச்சேரி நடைபெற்றது. அன்னதானத்தை எலும்பு மூட்டு சிறப்பு மருத்துவர் தர்மராஜன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.


Next Story