சிறப்பு வார்டு சபை கூட்டம்
வடமதுரை பேரூராட்சியில் சிறப்பு வார்டு சபை கூட்டம் நடந்தது.
திண்டுக்கல்
காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடப்பது வழக்கம். புதிய முயற்சியாக வடமதுரை பேரூராட்சி 6-வது வார்டில் கடந்த சுதந்திர தினத்தில் வார்டு சபை கூட்டம் நடந்தது. அதேபோல் நேற்று 14-வது வார்டு ஏ.வி.பட்டியில் காந்திஜெயந்தியையொட்டி சிறப்பு வார்டு சபை கூட்டம் நடைபெற்றது. வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 14-வது வார்டு கவுன்சிலரும், தி.மு.க. நகர செயலாளருமான கணேசன் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மற்றும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதில் பேரூர் துணை செயலாளர்கள் வீரமணி, தேன்மொழி, அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், 2-வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணி, தி.மு.க. மாணவரணி சசிக்குமார், வார்டு செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story