சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
பாணாவரம் அருகே சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த ரங்காபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் உதயகுமார் தலைமை தாங்கினார். முகாமில் 560-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பரிசோதனை செய்து தடுப்பூசி, குடற்புழு நீக்க மருந்து வழங்குதல், சினை ஊசி போடுதல், சினைப்பரிசோதனை ஊசி போடப்பட்டது.
மேலும் கால்நடைகளுக்கு வழங்கும் தீவனங்கள் குறித்தும், கால்நடைகளை மழை காலங்களில் பராமரிப்பது குறித்தும் எடுத்துரைத்தனர். முகாமில் டாக்டர்கள் மனோகரன், கோபாலகிருஷ்ணன், சவுமியா, தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பேராசிரியர் சரஸ்வதி, கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பணி உதவியாளர்கள், விவசாயிகள், கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story