காசி தமிழ் சங்கமத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்: தெற்கு ரெயில்வே


காசி தமிழ் சங்கமத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்: தெற்கு ரெயில்வே
x
கோப்புப்படம் 
தினத்தந்தி 9 Dec 2023 4:57 AM IST (Updated: 9 Dec 2023 6:05 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

வாரணாசியில் வருகிற 17-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை இரண்டாவது 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல், கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரெயில் எண். 06101, சென்னை சென்ட்ரல்- வாரணாசி சிறப்பு ரெயில், வருகிற 15ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட உள்ளது.

ரெயில் எண். 06103, கன்னியாகுமரி-வாரணாசி சிறப்பு ரெயில் கன்னியாகுமரியில் இருந்து 20ஆம் தேதி புறப்படும். ரெயில் எண் 06105, கோயம்புத்தூர்- வாரணாசி சிறப்பு ரெயில் கோயம்புத்தூரில் இருந்து 19ஆம் தேதி மாலை 4.30 மணிக்குப் புறப்படும்.

காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சிக்காக தென்னிந்தியாவில் இருந்து வாரணாசிக்கு வரும் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.


Next Story