பெங்களூரு-கொச்சுவேலி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்


பெங்களூரு-கொச்சுவேலி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
x

பெங்களூரு-கொச்சுவேலி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை,

பயணிகளின் வசதிக்காக பெங்களூரு-கொச்சுவேலி (திருவனந்தபுரம்) இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி பெங்களூரு-கொச்சுவேலி (வண்டி எண்.06239) சிறப்பு ரெயில் பெங்களூருவிலிருந்து செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை முதல் அடுத்த மாதம் 17-ந்தேதி வரை இரவு 9 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் மதியம் 2.15 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

பெங்களூரு-கொச்சுவேலி (வண்டி எண்.06240) சிறப்பு ரெயில் கொச்சுவேலியிலிருந்து புதன்கிழமை முதல் அடுத்த மாதம் 18-ந்தேதி வரை திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 10 மணிக்கு பெங்களூருவை சென்றடையும்.

இந்த சிறப்பு ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிகரை, காயங்குளம் மற்றும் கொல்லம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story