திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கம்


திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கம்
x

கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு மெமு ரெயில் இயக்கப்படுகிறது.

திருச்சி,

வார விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு மெமு ரெயில் இயக்கப்படுகிறது.

அதன்படி இந்த சிறப்பு ரெயிலானது (எண் : 06008) இன்று இரவு 11 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு கும்பகோணம், சிதம்பரம், விழுப்புரம் வழியாக நாளை (திங்கட்கிழமை) காலை 6.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்று திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story