கொச்சுவேலி-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கம்


கொச்சுவேலி-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
x

கூட்ட நெரிசலை தவிர்க்க கொச்சுவேலி-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து பெங்களூருவுக்கு வருகிற 3-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமைதோறும் கொச்சுவேலியில் மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு அடுத்தநாள் காலை 10.55 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரெயில் புதன்கிழமைகளில் போத்தனூருக்கு அதிகாலை 1.58 மணிக்கும், திருப்பூருக்கு 3.15 மணிக்கும், ஈரோட்டுக்கு 4.10 மணிக்கும், சேலத்துக்கு 5.07 மணிக்கும் செல்லும்.

இதுபோல் பெங்களுரு-கொச்சுவேலி சிறப்பு ரெயில் வருகிற 4-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை வரை இயக்கப்படுகிறது. புதன்கிழமைதோறும் பெங்களூருவில் மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு அடுத்தநாள் காலை 6.45 மணிக்கு கொச்சுவேலிக்கு சென்றடையும். இந்த ரெயில் புதன்கிழமைகளில் மாலை 4.57 மணிக்கு சேலத்துக்கும், 5.50 மணிக்கு ஈரோட்டுக்கும், 6.43 மணிக்கு திருப்பூருக்கும், 8.15 மணிக்கு போத்தனூருக்கும் வந்து சேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story