ஈரோடு - ஒடிசா இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
ஈரோடு - ஒடிசா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை,
சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் இருந்து ஜோலார்பேட்டை சேலம் வழியாக ஈரோடு வரை வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, சாம்பல்பூர் - ஈரோடு வாராந்திர சிறப்பு ரெயில் (08311) நாளை முதல் நவம்பர் மாதம் 27-ந் தேதி வரை புதன்கிழமைகளில் சாம்பல்பூரில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு நெல்லூர், கூடூர், பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக வியாழக்கிழமை இரவு 7.22 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 7.25 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு ஈரோடு சென்றடையும்.
மறுமார்க்கத்தில் ஈரோடு - சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் (08312) வருகிற 23-ந் தேதி முதல் நவம்பர் 29-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3.47 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 3.50 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லூர் வழியாக சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு சாம்பல்பூர் சென்றடையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.