பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூரை அடுத்த வாலிகண்டபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பூப்பந்தல் அலங்காரம் செய்யப்பட்டு மூலவருக்கு திருமஞ்சனமும், திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. மேலும் பத்மாவதி தாயார், ஆண்டாள் மூலவர் சிலைகளுக்கும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. இதில் வாலிகண்டபுரம், எளம்பலூர் இந்திராநகர், செங்குணம், மங்களமேடு, ரஞ்சன்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாள்-தாயார் மற்றும் ஆண்டாளை வழிபட்டனர்.
இதனைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மேலும் வருகிற சனிக்கிழமை (5-வது சனி உற்சவம்) விமரிசையாக நடைபெற உள்ளதாக கோவில் அர்ச்சகர் கோகுல் பட்டாச்சாரியார் தெரிவித்தார்.
Related Tags :
Next Story