ஓசூர் பிரத்தியங்கரா தேவி கோவிலில் சிறப்பு யாகம்
பவுர்ணமியையொட்டி ஓசூர் பிரத்தியங்கரா தேவி கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.
கிருஷ்ணகிரி
ஓசூர் :
ஓசூர் அருகே மோரனப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராகு, கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கரா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் கண் திருஷ்டி நீங்கவும், செய்வினை, பில்லி சூனியம், துஷ்ட சக்திகள் போன்றவற்றை அகற்றும் விதமாக பக்தர்கள் மிளகாய் வத்தல் கொண்டு சிறப்பு யாகங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் புரட்டாசி பவுர்ணமியையொட்டி ராகு, கேது ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதேபோல், கால பைரவருக்கும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர், மகா பிரத்தியங்கரா தேவி அம்மனுக்கு மிளகாய் வற்றல் கொண்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story