பழனி முருகன் கோவிலில் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை


பழனி முருகன் கோவிலில் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 19 Oct 2023 5:30 AM IST (Updated: 19 Oct 2023 5:30 AM IST)
t-max-icont-min-icon

ஐப்பசி மாதப்பிறப்பையொட்டி நேற்று காலை மலைக்கோவிலில் உள்ள ஆனந்தவிநாயர் சன்னதியில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

திண்டுக்கல்

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா என வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்களின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருவர். இதேபோல் மாத கார்த்திகை உற்சவம், தமிழ்மாத பிறப்பு, வாரவிடுமுறை ஆகிய நாட்களிலும் பக்தர்கள் வருகை வழக்கத்தை விட அதிகரித்து காணப்படும்.

அதன்படி ஐப்பசி மாதப்பிறப்பையொட்டி நேற்று காலை மலைக்கோவிலில் உள்ள ஆனந்தவிநாயகர் சன்னதியில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு வெள்ளிக்கவச அலங்காரத்தில் ஆனந்த விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story