பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
ரமலான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்:
ரமலான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு தொழுகை
கும்பகோணத்தில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ரமலான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். இதை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு மற்றும் தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்கம் ஆகியவை பெரிய பள்ளிவாசல், அரக்காசியம்மாள் பள்ளிவாசல், ஹாஜியார் பள்ளிவாசல் ஆகியவற்றில் சிறப்பு ரமலான் தொழுகையை நடத்தினர்.
இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். அனைத்து சமூக மக்களும் நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழவும், ஏழை, எளியோர் வாழ்வில் ஏற்றம் பெறவும் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
தொழுகைக்கு பின்னர் ஒருவரை ஓருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
ஆடுதுறை
இதேபோல் சாந்தி நகர் திடல்,மேலக்காவேரி, ஆடுதுறை, அவணியாபுரம், திருநாகேஸ்வரம், திருமங்கலக்குடி, திருப்பனந்தாள், தத்துவாஞ்சேரி, கோணுளாம்பள்ளம், சோழபுரம் என பல்வேறு இடங்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை- பேராவூரணி
பட்டுக்கோட்டையில் உள்ள வடசேரி ரோடு பெரிய பள்ளிவாசல் திறந்தவெளி மைதானத்தில் ரமலான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். பேராவூரணியில் உள்ள ஜமாலியா பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது.