முகரம் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை
முகரம் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை
நாகூர் தர்காவில் முகரம் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
முகரம் பண்டிகை
முகரம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை முஸ்லிம்கள் துக்க நாளாக முகரம் பண்டிகையை கடைப்பிடிக்கின்றனர். முகரம் பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா யாஹூசைன் பள்ளியில் தர்கா பரம்பரை கலிபா சிறப்பு பாத்திஹா ஓதினார். பின்னர் இஸ்லாமியர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அப்போதுஅவரின் தியாகத்தை போற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
சிறப்பு பிரார்த்தனை
மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி தர்கா நிர்வாகம் சார்பில் துவா செய்யப்பட்டது. அதேபோல் மாவட் டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் முகரம் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தர்கா போர்டு ஆப் டிரஸ்டிகள் செய்து இருந்தனர்.