இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை


இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
x

இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம்:

பக்ரீத் பண்டிகையையொட்டி அதிராம்பட்டினம், திருப்பனந்தாளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

சிறப்பு தொழுகை

இஸ்லாமியர்களின் தியாக திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையை நேற்று கொண்டாடப்பட்டது. பண்டிகையையொட்டி அதிராம்பட்டினம் மேலத்தெரு, கீழத்தெரு, சி.எம்.பி. லைன், கல்லு கொல்லை, பிளால் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மசூதிகளிலும், திடல்களிலும் ஏராளமான இஸ்லாமிர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கினர். தொடர்ந்து ஆடு, மாடு ஆகியவற்றை குர்பானி கொடுத்து அந்த இறைச்சியின் ஒரு பங்கை ஏழை எளியவர்களுக்கும், ஒரு பங்கை உற்றார் உறவினர்களுக்கும், ஒரு பங்கை தங்களுக்கும் என பிரித்து கொடுத்து மகிழ்ச்சியுடன் தியாக திருநாளை இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

திருப்பனந்தாள்

இதேபோல் கும்பகோணம், மேலக்காவேரி, திருப்பனந்தாள், தத்துவாஞ்சேரி, கோணுளாம்பள்ளம், கருப்பூர், செறுகடம்பூர், சிக்கல் நாயக்கன்பேட்டை, திருலோகி, கதிராமங்கலம், சோழபுரம், திருமங்கலக்குடி, ஆடுதுறை உள்ளிட்ட பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடத்தினர். அப்போது அவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து ஆடுகளை பலியிட்டு இறைச்சியை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து கொண்டாடினர்.

சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

பாபநாசம்

இதேபோல் பாபநாசம் மற்றும் அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், சக்கராப்பள்ளி, பண்டாரவாடை, வழுத்தூர், ராஜகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

இதில் திரளானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஆடுகள் மற்றும் மாடுகளை பலியிட்டு தங்களின் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் தங்களை கட்டித்தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.


Related Tags :
Next Story