திரவுபதி அம்மன் கோவிலில் முத்தால ராவுத்தர் பீடத்திற்கு சிறப்பு பூஜை


திரவுபதி அம்மன் கோவிலில் முத்தால ராவுத்தர் பீடத்திற்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 7 Jun 2023 12:30 AM IST (Updated: 7 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி திரவுபதி அம்மன் கோவிலில் முத்தால ராவுத்தர் பீடத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் நாள் அன்று மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி காப்புகட்டும் பக்தர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இரவில் இந்து- முஸ்லிம் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள முத்தால ராவுத்தர் பீடத்திற்கு இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அப்துல் கரீம், ஹஜரத் ஆதம், மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள், பணியாளர்கள், ஆண்கள், பெண்கள், திரளாக வந்து பிரார்த்தை செய்தனர். தொடர்ந்து அங்கிருந்த பக்தர்களுக்கு சப்பாத்தி, ரொட்டி, சர்க்கரை, புட்டு மாவு போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

பின்னர் திரவுபதி அம்மன், அர்ச்சுனன், கிருஷ்ணன் ஆகிய சுவாமிகளுக்கு பூஜைகள் நடத்திய பின்பு கோவில் பூசாரி மாரிமுத்து மற்றும் (மருளாடிகள்) அதாவது சாமி கொண்டாடிகள், கோவில் பணியாளர்கள் பக்தி கோஷம் எழுப்பி கத்தியை வைத்து தங்களது இருபக்க தோல்பட்டைகளில் மாறி மாறி வெட்டிக் கொண்டு பூஜைகள் நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story