அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

திருப்பூர்

உடுமலை,

உடுமலையில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி 3-வது வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் மஞ்சள் கயிறு, வளையல் ஆகியவை வழங்கப்பட்டது.

வரலட்சுமி விரதம்

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த நாள் ஆகும். அதனால் ஆடிமாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று ஆடி 3-வது வெள்ளிக்கிழமையன்று வரலட்சுமி விரதமும் சேர்ந்து வந்தது.

இதையொட்டி உடுமலை மாரியம்மன் கோவிலில் திருமஞ்சனம், உச்சிகாலபூஜை, சிறப்புஅலங்காரம், மகாதீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கட்டளைதாரர்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.மேலும் பெண்பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு (தாலி சரடு) வளையல் ஆகியவை வழங்கப்பட்டது. சில பக்தர்கள் கேழ்வரகு கூழ் கொண்டு வந்திருந்து பக்தர்களுக்கு வழங்கினர். சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், செயல் அலுவலர் சி.தீபா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

ரேணுகாதேவி அம்மன்

உடுமலை-தளி சாலையில் பள்ளபாளையம் அருகில் உள்ள செங்குளம் கரைப்பகுதியில் உடுமலை திருப்பதி வேங்கடேசப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள ரேணுகாதேவி அம்மன் கோவிலில் ஆடிவெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் சிறந்த அலங்காரம், சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. ரேணுகாதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி பாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் வி.ராமகிருஷ்ணன், அறங்காவலர்கள், விழாக்குழுவினர் ஆகியோர் செய்திருந்தனர்.

இதேபோன்று உடுமலை நேரு வீதியில் உள்ள காமாட்சியம்மன் கோவில், கல்பனா சாலையில் உள்ள காளியம்மன் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

-


Next Story