முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜை
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
வாசுதேவநல்லூர்:
புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் அருள் பாலிக்கும் பெரிய பாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் தெய்வங்களுக்கு ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி முப்பெரும் தேவியர் அம்மாக்களுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்பட நறுமண பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. குருநாதர் சக்தியம்மா ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு அனைத்து பக்தர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை பாடல்கள் பாடினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் வாசுதேவநல்லூரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் என்ற சிந்தாமணி நாதர் கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் வாசுதேவநல்லூரில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.