புஷ்ப பல்லக்கில் வேதநாயகி அம்மன் வீதி உலா


புஷ்ப பல்லக்கில் வேதநாயகி அம்மன் வீதி உலா
x
தினத்தந்தி 23 July 2023 12:15 AM IST (Updated: 23 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புஷ்ப பல்லக்கில் வேதநாயகி அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் பல்ேவறு சிறப்புகளை கொண்ட தலமாகும். அகத்திய முனிவருக்கு சிவபெருமான் தம்பதி சமேதராக திருமணக்கோலத்தில் காட்சி அளித்த தலமான இங்கு பார்வதி தேவிக்கும், சரஸ்வதிக்கும் இடையே வீணையின் ஒலி இனிமையானதா? குரல் இனிமையானதா? என்ற போட்டி ஏற்பட்டது. அப்போது வீணையின் ஒலியை விட அம்மனின் குரல் இனிமையானதாக இருந்ததால், இந்த கோவிலில் உள்ள சரஸ்வதி வீணை இல்லாமல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதே நேரத்தில் அம்மனுக்கு யாழை பழித்த மொழியம்மை என்ற பெயா் ஏற்பட்டதாக தலவரலாறு கூறுகிறது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று முன்தினம் இரவு வேதநாயகி அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story